Last Updated : 04 Oct, 2014 08:55 AM

 

Published : 04 Oct 2014 08:55 AM
Last Updated : 04 Oct 2014 08:55 AM

தத்கல் ரயில் கட்டணம் மறைமுக உயர்வு!- 50% டிக்கெட்டுகளுக்கு புதிய கட்டண முறை

நாடு முழுவதும் 80 பிரபல ரயில்களில் தத்கல் டிக்கெட்டுகளில் பாதியளவை ‘டைனமிக் கட்டணம்’ என்ற புதிய முறையில் ரயில்வே விற்பனை செய்கிறது.

இதன்மூலம் ரயில் கட்டணங் களை பின்புற வழியாக ரயில்வே உயர்த்தியுள்ளது. பண்டிகை காலத்தில் ரயில்வேயின் இந்த முடிவு பயணிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பண்டிகைக்கால நெரிசலை பயன்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கத்தில், டைனமிக் கட்டண முறை அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இம்முறையில் அப்போதைய தேவையின் அடிப் படையில் கட்டணம் நிர்ணயிக் கப்படும்.

இதன்படி முதல் 50 சதவீத தத்கல் டிக்கெட்டுகள் வழக்கமான முறையிலும், எஞ்சிய டிக்கெட்டு கள் பிரிமியம் தத்கல் கட்டணம் என்ற பெயரில் புதிய முறையிலும் விற்பனை செய்யப்படும்.

இதனால் தத்கல் முறையில் முன்பதிவு செய்வோர் மிக விரைவாக முன்பதிவு செய்ய வேண்டும். இல்லாவிடில் அவர்கள் புதிய கட்டண முறையின் கீழ் கூடுதல் தொகை செலுத்த நேரிடும்.

இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “இம்முடிவை நடைமுறைப்படுத்த நாட்டின் 16 ரயில்வே மண்டலங் களுக்கும் தலா 5 பிரபல ரயில் களை தேர்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டது” என்றார்.

டெல்லியில் இருந்து மும்பை செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள், வைசாலி எக்ஸ்பிரஸ், சப்தகிரந்தி எக்ஸ்பிரஸ், ஹைதரா பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இக்கட்டண முறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிமியம் தத்கல் கட்டணமுறை அக்டோபர் 1-ம் தேதி நடை முறைக்கு வந்துவிட்டதாகவும் பயணிகள் ஆன்லைன் மூலம் இம்முறையில் முன்பதிவு செய்யலாம் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

பயணிகளுக்கு உறுதிசெய்யப் பட்ட (கன்ஃபர்ம்டு) டிக்கெட்டுகள் வழங்குவதை உறுதி செய்யவும் அவர்கள் இடைத்தரகர்களிடம் செல்வதை தடுக்கும் நோக்கத் திலும் இம்முறை அமல்படுத்தப் பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

டெல்லி மும்பை இடையே கூடுதல் கட்டணத்தில் பிரிமியம் ரயில்கள் கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் இயக் கப்பட்டன. இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் டைனமிக் கட்டண முறையில் 50 பிரிமியம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மானிய விலை பயணிகள் கட்டணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக ரயில்வே கூறுகிறது. தத்கல் முறையில் ரயில்வே தற்போது ரூ. 1000 கோடி வருவாய் ஈட்டுகிறது. பிரிமியம் தத்கல் கட்டண முறை மூலம் இந்த வருவாய் மேலும் அதிகரிக்கும்.

தத்கல் கட்டண முறை தற்போது 2,677 ரயில்களில் நடைமுறையில் உள்ளது. மொத்தமுள்ள 11.57 லட்சம் பயண இடங்களில் 1.71 லட்சம் இடங்கள் தத்கல் முறையில் முன்பதிவு செய்யப்படுகின்றன.

தத்கல் கட்டணங்கள் கடந்த ஆண்டு ஏப்ரலில் உயர்த்தப் பட்டன. 2-ம் வகுப்பு இருக்கை வசதி டிக்கெட்டுகளுக்கு அடிப் படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும் மற்ற டிக்கெட் களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 30 சதவீதமும் உயர்த்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x