Published : 01 Oct 2014 10:20 AM
Last Updated : 01 Oct 2014 10:20 AM

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு: உம்மன் சாண்டி, மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீரர் சத்திய மூர்த்தி மற்றும் காமராஜர் ஆகியோரின் சிலைகளை கேரள முதல்வர் உம்மன் சாண்டி, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திறந்து வைத்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைமைய கமான சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மறைந்த தமிழக முதல்வர் காமராஜருக்கு ஒன்பதரை அடி உயர வெண்கல சிலையும், விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்திக்கு மார்பளவு வெண்கல சிலையும் நிறுவப்பட் டுள்ளது. மேலும் ராஜீவ் காந்தி பெயரிலான உள்அரங்கம் புதுப்பிக் கப்பட்டுள்ளது. சிலைகள் மற்றும் அரங்கத்தின் திறப்பு விழா, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகன் தலைமையில் நேற்று நடந்தது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைவர்களின் சிலை களை திறந்து வைத்தனர். ராஜீவ் அரங்கை கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார்.

விழாவில் ஞானதேசிகன் பேசும்போது, ‘‘இந்த சிலைகளை அமைப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உதவி யாக இருந்தார். மேலும் பல காங் கிரஸ் நிர்வாகிகள் மிக உற்சாகத் துடன் கடினமான முயற்சிகளை மேற்கொண்டனர்’’ என்றார்.

பின்னர், அகில இந்திய காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை ஞானதேசிகன் வாசித் தார். அதில் கூறியிருந்ததாவது:

விடுதலைப் போராட்ட வீரர் களில் முதன்மையானவர் தீரர் சத்தியமூர்த்தி. விடுதலைப் போராட் டங்களில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை அமைக்க, சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர், நேருவுக்குப் பின் காங்கிரஸை மிக சிறப்பாக நிர்வகித்தார். மிக எளிமையுடன், எந்த ஆடம்பரத்தையும் அவர் விரும்புவதில்லை. அவரது வாழ்வியல் நெறிகளை நம் நாடு கடைபிடிக்க வேண்டியது கடமையாகும்.

தமிழகத்தை, தமிழக மக்களை, தமிழக கலாச்சாரத்தை நேசித்தவர் ராஜீவ் காந்தி. அவருக்கு நாம் உண்மையில் செலுத்தும் மரியாதை என்னவென்றால், அரை நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்திலிருந்த காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் திறம்பட செயல்பட வேண்டும்.

இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார்.

விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், புதுவை நாராயணசாமி, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், எம்எல்ஏக்கள் கோபிநாத், விஜயதாரணி, முன்னாள் எம்எல்ஏக்கள் நாமக்கல் ஜெயக்குமார், விடியல் சேகர், டாக்டர் செல்லக்குமார், சென்னை மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரம் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x