Published : 03 Sep 2014 09:30 AM
Last Updated : 03 Sep 2014 09:30 AM

சேலத்தில் நூதனமாக ரூ. 21 லட்சம் பறிப்பு: 2 கார் பறிமுதல்; 4 பேர் கைது

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் நகை மதிப்பீட்டாளர் குடும்பத் தினரை கத்தி முனையில் மிரட்டி ரூ. 21 லட்சத்தை பிளாக் மெயில் செய்து பறித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். சேலத்தில் பிரபல நகைக் கடையில் நகை மதிப்பீட்டாளராக பணி யாற்றி வந்தார். கடந்த 6 மாதங் களுக்கு முன்பு பணியில் இருந்து விடுபட்டார். பின், சக்திவேல் சொந்தமாக தங்கம் மற்றும் வெள்ளி நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சக்திவேல் பிரபல நகைக் கடையில் பணியாற்றி வந்த போது, அவருடன் பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் உடன் பணியாற்றி வந்தார்.

கணேஷ்பாபு கடந்த ஜூன் மாதம் சக்திவேலை சந்தித்து, நீ தங்க நகைக் கடையில் வேலை செய்தபோது, அந்த நகைக் கடையில் திருடியதால்தான் உன்னை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இந்தத் தகவலை ஊர் முழுவதும் சொல்லி அவமான படுத்திவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், சக்திவேல் அச்சம் அடைந்தார். இந்த தகவலை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமெனில், ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கணேஷ் பாபு, சக்திவேலை மிரட்டியுள் ளார். இதில் பயந்து போன சக்தி வேல் 2 லட்சம் ரூபாயை கணேஷ் பாபுவிடம் கொடுத்துள்ளார்.

சக்திவேலின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட கணேஷ்பாபு பிளாக் மெயில் செய்து பணம் பிடுங்கி வந்துள்ளார். சக்திவேலிடம் பிளாக் மெயில் செய்து பணம் பிடுங்கி வருவதை அவரது நண்பர்கள் நந்தகுமார், கிரண், சண்முகம் ஆகியோரிடம் கூறியுள்ளார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து சக்திவேலின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரை மிரட்டி மீண்டும் மீண்டும் பணம் பிடுங்கி வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு 5 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர்.

மீண்டும் நேற்று முன் தினம் 4 பேரும் சேர்ந்து சக்திவேலின் வீட்டுக்குச் சென்று கத்தியைக் காட்டி, அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன சக்தி வேல், தனது வீட்டை மைத்துன ரிடம் ரூ.14 லட்சத்துக்கு அடகு வைத்து, அந்தப் பணத்தை அப் படியே கணேஷ்பாபுவிடம் கொடுத் துள்ளார். பின், சக்திவேல் தன்னை தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வரும் கணேஷ்பாபு உள்ளிட்டவர் கள் மீது அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அம்மாபேட்டை காவல்துறை யினர் சக்திவேலிடம் பணம் பறித்த கணேஷ்பாபு, நந்தகுமார், கிரண், சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம், 3 பவுன் தங்க நகை மற்றும் மிரட்டி பறித்த பணத்தில் இருந்து வாங்கிய 2 கார்கள், ஒரு புல்லட் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். நூதன முறை யில் பணம் பிடுங்கிய 4 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x