Last Updated : 26 Sep, 2014 10:34 AM

 

Published : 26 Sep 2014 10:34 AM
Last Updated : 26 Sep 2014 10:34 AM

சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க பெரும்பாலான மாநில அரசுகள் சம்மதம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

முக்கிய வழக்குகளில் சாட்சி களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழகம் உள்பட பெரும்பாலான மாநில அரசுகள் சம்மதம் தெரி வித்துள்ளன. அனைத்து மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட் டதும் தனிச்சட்டம் கொண்டுவரு வது குறித்து முடிவெடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கீரனூரைச் சேர்ந்தவர் கே.திலகவதி. இவரது கணவர் வழக்கறிஞர் கார்த்தி கேயன் 2009 ஜூலை 2-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இருந்து வேறு மாவட்ட நீதிமன்றத் துக்கு மாற்றவும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி திலகவதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதைக் கட்டா யமாக்குவது குறித்து மத்திய உள்துறை செயலர், தமிழக காவல்துறை இயக்குநர் பதி லளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல் துறை இயக்குநர் தரப்பில் ஐ.ஜி. பி.தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையாவது கவலையளிக் கிறது.

சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறு கின்றனர் என்பதும் கவலையளிப் பதாக உள்ளது.

முக்கிய வழக்குகளில் சாட்சி களுக்கு வழக்கு முடியும்வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. சாட்சிகள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என நினைத்தால் போலீஸ் பாதுகாப்பு கோரலாம். சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க போலீஸார் தயாராக உள்ளோம். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கு வது தொடர்பாக சட்ட ஆணை யம் சில பரிந்துரைகளைத் தெரி வித்துள்ளது. பொய் சாட்சியம் அளிக்குமாறு ஒருவரை மிரட்டு வது குற்றமாகும் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது.

மத்திய உள்துறை செயலர் தரப்பில் துணைச் செயலர் மணிராம் தாக்கல் செய்த பதில் மனு: கடுமையான குற்ற வழக்கு களில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் சட்ட ஆணையம் அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் 13 கேள்விகளுக்கு பதில் கேட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இந்த கடிதத்துக்கு குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் கருத்து தெரிவித் துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் முக்கிய வழக்குகளில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. சில மாநில அரசுகள் சிறிய அளவிலான சந்தேகங்கள் கேட்டுள்ளன.

அனைத்து மாநில அரசுகளிடம் கருத்துகள் பெறப்பட்ட பின், சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பாக தனியாக சட்டம் கொண்டு வரப் படுமா? அல்லது இந்திய தண் டனைச் சட்டம், குற்றவியல் நடை முறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய லாமா என்பது குறித்து முடி வெடுக்கப்படும்.

வன்கொடுமை சட்ட வழக்குகளில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

கூலிப்படையை கட்டுப்படுத்த சட்டம்

சாட்சிகள் பாதுகாப்பு வழக்கின் விசாரணையின்போது, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூலிப்படையினரை தடுக்க தனிச் சட்டம் உள்ளது. தமிழகத்திலும் அதேபோன்ற சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து தமிழக உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற வழக்குகள், கைதானோர் விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x