Published : 11 Apr 2014 12:00 AM
Last Updated : 11 Apr 2014 12:00 AM

தொலைதொடர்பு மருத்துவத்தை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் வலியுறுத்தல்

கிராம மக்களுக்கு உயர் சிறப்பு சிகிச்சை அளிக்க தொலைதொடர்பு மருத்துவத்தை கிராமங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் வலியுறுத்தினார்.

சென்னை போரூர் ஸ்ரீராமச் சந்திரா பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழா வியாழக்கிழமை நடை பெற்றது. இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

டெலிமெடிசின் வசதி

கிராமப்புற மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவக் கல்வி வழங்க வும், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் தொலைதொடர்பு மருத்துவத்தை (டெலிமெடிசின்) கிராமங்களுக்கு விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். இஸ்ரோ உதவி யுடன் தொடங்கப்பட்டுள்ள 400 டெலிமெடிசின் மையங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் அந்த வகையில், ராமச்சந்திரா பல்கலைக்கழகம், அதி நவீன தொலைதொடர்பு மற்றும் மருத்துவக் கல்வி சிகிச் சையை ஏற்படுத்தி நாட்டின் பிற பகுதிகளையும், மத்திய அரசின் “பான் ஆப்ரிக்கா தொடர்பு” மூலம் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைத் திருப்பது பாராட்டுக் குரியது.

வியக்கத்தக்க வளர்ச்சி

அடுத்த 10, 20 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் வியக்கத் தக்க முன்னேற்றங்களை காண உள்ளோம். நமது உடல் ஏற்றுக் கொள்ளும் வகையிலான செல் களை திசு வளர்ப்பு மூலம் உருவாக்கி உடல் உறுப்புகளை தயாரிக்க முடியும். அதேநேரத்தில், இந்த விஷயத்தில் சமூக ஏற்பு உடன்பாட்டோடு சட்டங்கள் இயற்றி செயல்படுத்த வேண்டியதும் அவசியம். இவ்வாறு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் கூறினார்.

மாணவிக்கு 4 பதக்கங்கள்

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ-மாணவி களுக்கு அவர் தங்கப் பதக்கங் களை வழங்கினார். எம்.பி.பி.எஸ். படிப்பில் ராஜ்மாதங்கி 4 தங்கப் பதக்கங்கள் பெற்றார். பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக, துணைவேந்தர் ஜெ.எஸ்.என்.மூர்த்தி வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் தலைமை ஆலோசகர் டி.கே.பார்த்தசாரதி, ஆய்வுத்துறை தலைவர் எஸ்.பி.தியாகராஜன், இதய நோய் சிகிச்சை மைய தலைவர் டாக்டர் எஸ்.தணிகா சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x