Published : 08 Jan 2014 10:17 AM
Last Updated : 08 Jan 2014 10:17 AM

நாடு முழுவதும் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 17ல் முக்கிய முடிவுகள் எடுக்கிறது காங்கிரஸ்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி கூடுகிறது. இதில், பிரியங்காவை தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபடுத்துவது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதி யாகி விட்டது. பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியானவர் என்று பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர் களும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும், முறைப்படி அறிவிப்பு வெளியாகவில்லை.

பொதுச் செயலாளர்கள் ராஜினாமா

இந்த நிலையில், ஜனவரி 17-ல் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூடு கிறது. சுமார் 1500 பேர் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முறைப்படி அறிவிக்கப்பட இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து டெல்லியிலிருந்து ’தி இந்து’விடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், “17-ம் தேதி கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தேர்த லில் போட்டியிடும் கட்சியின் அகில இந்திய பொதுச் செய லாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள், தேர்தல் பணி களை கவனிக்க ஏதுவாக தங்க ளது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யும்படி இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும்.

நாடு முழுவதும் பிரச்சாரம்

இதுவரை ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார் பிரியங்கா. இந்தமுறை சோனியாவுக்கு பதிலாக அவரே ரேபரேலியில் போட்டியிடும் வாய்ப்புள்ளது.. அதேநேரம், மோடி அலை எனும் மாயையை வீழ்த்துவதற்கு இந்தியா முழுவதும் பிரியங்காவை பிரச்சாரத்திற்கு அனுப்ப காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்கான வியூகங் களை வகுப்பதற்காகவே கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார் பிரியங்கா. 17-ம் தேதி கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார். அந்தக் கூட்டத்தில் பிரியங்கா என்ன பேசப் போகிறார் என்பதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம்” என்றார் அவர்.

கோட்டா சீட் இனி இல்லை

டெல்லியிலுள்ள தமிழக காங் கிரஸ் பிரமுகர் இன்னொருவரிடம் பேசியபோது, “நான்கு மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது, குறிப்பாக டெல்லியில் தோற்றது எங்களுக்கு நல்லதொரு எச்சரிக்கை. இல்லாவிட்டால், அஜாக்கிரதையாகவே இருந்திருப் போம். இப்போது, தோல்வி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் தினந் தோறும் நடக்கிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை போக்குவதற்காக அதிரடியான சில முடிவுகளை அமல்படுத்தப் போகிறார் ராகுல். இனி, கோட்டா சிஸ்டத்தில் யாருக்கும் சீட் ஒதுக்கமாட்டார்கள். இளைஞர்களுக்கும் புதுமுகங்க ளுக்கும் இந்தத் தேர்தலில் அதிக வாய்ப்பளிக்கப்படும்” என்றார்.

ராகுலுக்கு பின்னணியில் ரஜினி பாட்டு

இதனிடையே, தேர்தல் பிரச் சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சாதனைத் திட்டங்களை விளக்கும் பிரச்சாரப் படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. வழக்கமாக இது போன்ற பிரச்சார படங்கள், ஹிந்தியில் எடுக்கப்பட்டு பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும். ஆனால், இம்முறை அந்தந்த மாநில மொழிகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. திரை யில் இளைஞர்களும் இளம் பெண்களும் தோன்றி காங்கிரஸின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்வதுடன், ‘வாயால் வடை சுடுவதல்ல காங்கிரஸ்; மக்களுக் கான திட்டங்களை செயல்படுத்திக் காட்டுவதுதான் காங்கிரஸ்’ என்று வசனமும் பேசுகிறார்களாம். தமிழகத்திற்கான பிரச்சார சி.டி.யில் ’நாக்க முக்க’ பாட்டும் வருகிறதாம். அத்துடன், ராகுல் காந்திக்கு பின்னணியில் ’எங்கிட்ட மோதாதே… நான் ராஜாதி ராஜனடா’ என்ற சூப்பர் ஸ்டாரின் பாடலையும் ஓடவிட்டு அசத்தி இருக்கிறார்களாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x