Published : 24 Mar 2014 13:42 pm

Updated : 25 Mar 2014 10:35 am

 

Published : 24 Mar 2014 01:42 PM
Last Updated : 25 Mar 2014 10:35 AM

பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல்

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

பாஜகவில் பல்வேறு பொறுப்பு களை வகித்துள்ளவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் (76), தனது சொந்த ஊர் அமைந்துள்ள பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு பாஜக தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை. சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜக வில் இணைந்த சோனாராம் சவுத்ரிக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட் டுள்ளது.


இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் சிங், சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

பார்மர் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்த ஜஸ்வந்த், பாஜக சார்பிலா அல்லது சுயேச்சையா கவா என்பதற்கான பதில், பாரதிய ஜனதா கட்சி எடுக்கும் முடிவில்தான் இருப்பதாகத் தெரிவித் திருந்தார். பாஜக தனது முடிவை அறிவிக்க 48 மணி நேர கெடு விதித்தார். கட்சித் தலைமையி டமிருந்து சாதகமான பதிலேதும் வராததால், சுயேச்சை வேட்பாள ராக மனு தாக்கல் செய்துள்ளார்.

திங்கள்கிழமை காலை பார்மர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் ஜஸ்வந்த் சிங் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், “எனது கடைசி தேர்தலில் பார்மர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 18 மாதங்களுக்கு முன்பே அத்வானியிடம் தெரிவித்திருந் தேன். அவரிடம் தெரிவித்த சில வாரங்களுக்குப் பின்பு ராஜ்நாத் சிங்கிடமும் கூறியிருந்தேன்.

வேட்பாளர்களை தேர்வு செய்யும் கட்சியின் தேர்தல் குழுவின் முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் பார்மர் தொகுதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அது பற்றி ராஜ்நாத்திடம் கேட்டேன். அதற்கு அடுத்த நாள் என்னைத் தொடர்பு கொண்ட ராஜ்நாத் சிங், எனக்கு பார்மர் தொகுதி ஒதுக்கப்படாது என்பதை தெரிவித்தார்.

சமீபகாலம் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பாஜகவை குறை கூறிய ஒருவருக்கு அந்த தொகுதியை இப்போது ஒதுக்கீடு செய்துள்ளது வருத்தமளிக்கிறது.

பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. எனக்கு எதிராக வசுந்தரா ராஜே சதி செய்துவிட்டார். அவர்கள் எனக்கு மட்டுமல்ல, பாஜக கொள்கைக்கும், சித்தாந்தங்களுக் கும் துரோகம் இழைத்துவிட்டனர்.

அதிலும் குறிப்பாக ராஜ்நாத் சிங், இரண்டாவது முறையாக எனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு என்னை கட்சியை விட்டு ராஜ்நாத் சிங் நீக்கினார். பாஜக அலுவலக உதவியாளரைக் கூட அவ்வாறு சர்வ சாதாரணமாக நீக்கியிருக்க முடியாது.

பார்மர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்புதான் மனதுக்கு நிம்மதியாக உள்ளது. கொள்கைக்காகவும், கவுரவத்துக்காகவும் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது கவுரவத்துக்காக மட்டுமல்ல பார்மரில் வசிக்கும் அனைவரின் கவுரவத்துக்காகவும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

நரேந்திர மோடிக்கு அளிக்கப் படும் முக்கியத்துவம், பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நடைமுறை ஆகியவை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. அனைவரை யும் அரவணைத்துச் செல்லும் போக்கு கட்சியில் இல்லை.

நான் கட்சியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பினால் என்னை கட்சியை விட்டு நீக்கட்டும்” என்றார்.

ஜஸ்வந்த் சிங், தற்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு ஜோத்பூர், சித்தோர்கர் தொகுதிகளின் எம்.பி.யாக இருந்துள்ளார். முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வெளியுறவு, நிதி, பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜஸ்வந்த் சிங் பதவி வகித்துள்ளார்.


ஜஸ்வந்த் சிங்பார்மர் தொகுதிசுயேச்சை வேட்பாளர்

You May Like

More From This Category

More From this Author