Published : 21 Apr 2014 08:59 AM
Last Updated : 21 Apr 2014 08:59 AM

வயதான சகோதரிகள் கொலையில் 7 பேர் சிக்கினர்: 3 ஆண்டுகள் தேடுதலுக்கு பலன்

சென்னை குமரன் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு சகோதரிகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், வீட்டு வேலைக்காரி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்ட ராமன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). திருமணமாகவில்லை. இவரது தங்கை காமாட்சி (65). இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. குழந் தைகள் இல்லை. இவர் மத்திய அரசு நிறு வனமான கிங் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரிய ராக பணிபுரிந்தவர். சகோதரிகளான இரு வரும் ஒரே வீட்டில் தனியாக வசித்த னர். ஜெயலட்சுமி பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டிருந்தார். அவரை காமாட்சி கவனித்து வந்தார். இந்நிலையில் 2011-ம் ஆண்டு மே 11-ம் தேதி அவர்கள் வீட்டிலேயே சகோதரிகள் இருவரும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக் காமல் இருந்தது. இந்நிலையில் சகோதரி களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி விஜயலட்சுமி(42), அவரது கணவர் மகேந் திரன் உள்ளிட்ட 7 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:

இரட்டை கொலை நடந்த நிலையில் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி விஜயா குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார். இதனால் அவரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது, அவரது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்ட சரவணன் என்பவரை பிடித்து முதலில் விசாரித்தோம். அவர் கொடுத்த தகவலின் பேரில் விஜ யாவை கைது செய்தோம். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 4 சிறுவர்களை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

சகோதரிகளின் வீட்டில் வேலைக்காரி யாக சேர்ந்த விஜயலட்சுமி, அவர்களிடம் நகை, பணம் இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கு சரவணன் உதவியை நாட, அவரும் திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார். வீட்டில் இருந்த ஓட்டைகளை அடைக்கவும், சில வேலைகளை செய்யவும் ஆட்களை அழைத்து வருவதாக வேலைக்காரி விஜய லட்சுமி கூற, சகோதரிகளும் சம்மதம் தெரிவித் துள்ளனர். அதைத் தொடர்ந்து சரவணன், தரமணியை சேர்ந்த வினோத்(19), தி.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார்(21), முத்து(19), ஹரிகிருஷ்ணன்(20) ஆகிய 5 பேர் வேலை செய்ய வந்திருப்பதாகக் கூறி சகோதரிகளின் வீட்டுக்குள் புகுந்து, ஜெய லட்சுமியையும், காமாட்சியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள், ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வினோத்(19), சந்தோஷ்குமார்(21), முத்து(19), ஹரிகிருஷ் ணன்(20) ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களாக இருந்தபோது கொலை செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ‘எங்களுக்கு குடிக்க மதுவும், செலவு செய்ய பணமும் சரவணன் கொடுத்தார். இதேபோல தினமும் பணம் வேண்டும் என்றால் நான் சொல்வதை செய்ய வேண்டும் என்று கூறி எங்களை கொலை செய்ய வைத்தார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் எங்களை கொன்று விடுவதாகவும் மிரட்டி னார்' என்று கூறியுள்ளனர்.

வேலைக்காரி விஜயலட்சுமி, அவரது கணவர் மகேந்திரன், சரவணன், வினோத், சந்தோஷ்குமார், முத்து, ஹரிகிருஷ் ணன் ஆகிய 7 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். 3 ஆண்டுகள் விசாரணைக்கு பலன் கிடைத்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x