Published : 11 Apr 2014 10:50 am

Updated : 11 Apr 2014 10:50 am

 

Published : 11 Apr 2014 10:50 AM
Last Updated : 11 Apr 2014 10:50 AM

ரிச்சர்ட் ரெகி - இவரைத் தெரியுமா?

$ கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேபிஎம்ஜி நிறுவனம் வருமான வரி கணக்கு தணிக்கை உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 87 அலுவலகங்கள் 13 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்படும் இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு தலைவர்.


$ டெல்லி பல்கலைக் கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், சிஏ பட்டமும் பெற்றவர்.

$ சார்டர்ட் அக்கவுன்டன்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இதற்கு முன்பு எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் ஆர்தர் ஆண்டர்சன் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

$ எண்ணெய் எரிவாயு, தொழிற்சாலை, நுகர்வோர் சந்தை, மருந்து தயாரிப்பு, தொழில்நுட்பம், உற்பத்தித் துறை உள்ளிட்ட தொழில்துறையினருக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

$ உலகம் முழுவதும் உள்ள தொழில் குழுமங்களோடு தொடர்பு உள்ளவர். தொழில் சம்மேளனங்கள், கூட்டமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். அமெரிக்க வர்த்தக சங்கத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

$ மிகச் சிறந்த பேச்சாளர், வணிகவியல், நிர்வாகம் சார்ந்த கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.


ரிச்சர் ரெகிஇவரைத் தெரியுமாகேபிஎம்ஜி

You May Like

More From This Category

More From this Author