Published : 26 Apr 2014 11:54 AM
Last Updated : 26 Apr 2014 11:55 AM
‘கோச்சடையான்’ படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொண்டு கோச்சடை யான் படத்தைப் பார்க்கவுள்ளனர்.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் மே 9 ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக மும்பையில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சியில் இப்படத்தை நரேந்திரமோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த சிறப்புக் காட்சியில் ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் காண வுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியி டும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷ னல் பிக்சர்ஸ் புரெடக்ஷன் நிறுவனம் செய்து வருகிறது.