Published : 17 Apr 2014 10:45 AM
Last Updated : 17 Apr 2014 10:45 AM

2020-ல் தமிழக வாகனங்களின் எண்ணிக்கை 5.61 கோடியாக உயரும்: நுண்ணறிவு போக்குவரத்துத் துறை ஆய்வில் தகவல்

வரும் 2020-ல் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 5 கோடியே 61 லட்சத்து 43,622 ஆக உயரும் என நுண்ணறிவு போக்குவரத்து துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரத்து 433 வாகனங்கள் இயங்குகின்றன. இதில் சென்னையில் மட்டும் 41 லட்சத்து 60 ஆயிரத்து 790 வாகனங்கள் உள்ளன. ஆனால், இதுவே 2020-ல் தமிழகத்தில் வாகனங் களின் எண்ணிக்கை 5 கோடியே 61 லட்சத்து 43,622 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள்

தமிழகத்தில் தற்போது தினந் தோறும் சுமார் 4000 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகிறது. தினந்தோறும் 3666 பேர் லைசென்ஸ் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக் கிறது. அடுத்த 5 ஆண்டில் இது 10 சதவீதமாகலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மாநகர பஸ் மற்றும் ரயிலைப் பயன்படுத்துவோரின் எண் ணிக்கை 42 சதவீதமாக இருந்தது. இது தற்போது 31 சதவீதமாக குறைந் துள்ளது. மேலும், 7 சதவீதமாக இருந்த இருசக்கர வாகன பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரித் துள்ளது. அதுபோல், கார் பயன் பாட்டாளர்களின் எண்ணிக்கை 1.50 சத வீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அரசு திட்டங்கள் என்னென்ன?

போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்கான அரசின் திட்டம்குறித்து இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையில் பொது வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங் கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுதவிர, ஒவ்வொரு நகரம் மற்றும் மாநகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களை பதிவு செய்ய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்றனர்.

வல்லுநர்களின் யோசனை

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களை ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் எதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதற்கான தீர்வு என்ன என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள் நிறுத்தும் இடத்தில் ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க கூடாது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல் லாம் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து அண்ணாசாலை வரையில் உள்ள சாலையில் 3 வகையாக பாதை கள் பிரித்து இயக்கப்பட்டன. அதை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

வாகன ஓட்டுநர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது சாலையில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்து அந்தந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், வாகன ஓட்டிகள் கடுமையான நெரிசல் உள்ள சாலைகளை தவிர்த்து செல்வார்கள்.

போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதற்கான முழு நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் போக்குவரத்து போலீஸ் பிரிவினர் எடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதி கரிக்கிறது. ஆனால், சாலை விரிவாக்க பணி 2 சதவீதம் கூட அதிகரிப்ப தில்லை. எனவே, தேவைக்கு ஏற்ற வாறு சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x