Published : 23 Apr 2014 12:24 PM
Last Updated : 23 Apr 2014 12:24 PM

டி.கே. குரியன் - இவரைத் தெரியுமா?

$ விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயல் இயக்குநர்.

$ விப்ரோ நிறுவனத்தின் எகோ எனர்ஜி, விப்ரோ கன்சல்டிங் சர்வீசஸ் விப்ரோ பிபிஓ உள்ளிட்ட துணை நிறுவனங்களின் தலைமைப் பதவியை வகித்தவர்.

$ இதற்கு முன்பு ஜிஇ எக்ஸ் ரே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், ஜிஇ மெடிக்கல் சிஸ்டம் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

$ ஹைதராபாதில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர். சார்டர்ட் அக்கவுண்ட் படிப்பு முடித்து இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி மையத்தின் உறுப்பினராக இருப்பவர்.

$ தகவல் தொழில்நுட்பத் துறை தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 3 கோடி முதல் ரூ. 10 கோடி வரையாகும்.

$ குறைவான பணியாளர்கள் மூலம் மிகச் சிறப்பான நிலைக்கு விப்ரோவை உயர்த்தியதில் இவரது பங்களிப்பு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x