Published : 13 Feb 2015 11:12 AM
Last Updated : 13 Feb 2015 11:12 AM

இவரைத் தெரியுமா? - வினோத் தாம்

$ பென்டியம் பிராசசரின் தந்தை என்று அழைக்கப்படுபவர். தவிர தொழில்முனைவோர் வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

$ புனேயில் பிறந்தவர். டெல்லி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் முடித்தார். 1971-ம் வருடம் டெல்லியில் இருக்கும் செமி கண்டக்டர் நிறுவனத்தில் சுமார் 4 வருடங்கள் பணி புரிந்தார்.

$ 1975-ம் வருடம் அமெரிக்காவுக்கு சென்றார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் முடித்தார்.

சில நிறுவனங்களில் வேலை செய்த பிறகு 1979-ம் ஆண்டில் இன்டெல் நிறுவனத்தில் சேர்ந்தார்.

$ 16 வருடங்களுக்கு பிறகு 1995ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். தன் வாழ்வில் எடுத்த முக்கியமான முதல் முடிவு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது.

அடுத்த முக்கிய முடிவு அங்கிருந்து வெளியேறும் போது எடுத்தது என்று கூறியவர்.

$ அதன் பிறகு நெக்ஸ்ட்ஜென் என்னும் நிறுவனத்தில் சேர்ந்தார்.

NewPath Ventures என்னும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது Acadgild என்னும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x