Published : 12 Feb 2015 12:06 PM
Last Updated : 12 Feb 2015 12:06 PM

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் எனும் பிரபல சுற்றுலா தலத்தில் பனிச்சரக்கு விளையாட்டில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதர மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

காஷ்மீரில் சுற்றுலா தலமாகவும், பனிக்கால விளையாட்டுகளுக்கான தளமாகவும் குல்மார்க் விளங்கி வருகிறது. பலநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குல்மார்க்கை சுற்றிப்பார்க்க வந்து செல்கின்றனர். இங்கு நேற்று பனிச்சரக்கு விளை யாட்டு நடந்தது. அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு பேர் சிக்கினர். இதில் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். மற்ற மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் உள்ளூர் பனிச்சரிவு விளையாட்டு வழிகாட்டி யாகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, குல்மார்க் பகுதியில் உள்ள தங்கும் விடுதி களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளில் யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்று போலீஸார் சோதனை மேற்கொண்டு வரு கின்றனர்.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி நடந்தது. அதில் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x