Published : 28 Jan 2015 10:53 AM
Last Updated : 28 Jan 2015 10:53 AM

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இன்று பணி நியமன உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன.

2013-14-ம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக் கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்ஸி கடந்த ஜூன் மாதம் நடத்தியது.தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

இந்த எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 27.01.2015 முதல் 12.02.2015 வரை பிரேசர் பாலச்சாலை (Frazer Bridge road), வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்), சென்னை-3 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலு வலகத்தில் தேர்ச்சிப் பெற்றவர் களின் சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கான பணி நியமன உத்தர வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் இன்று (28-ம் தேதி) வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x