Published : 29 Jan 2015 09:29 AM
Last Updated : 29 Jan 2015 09:29 AM

புதுச்சேரி அருகே கனரா வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் ரூ.21 லட்சம் கொள்ளை

புதுச்சேரி அருகே கனரா வங்கி ஏடிஎம்மில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ.20.80 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் நள்ளிரவில் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீ ஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புதுச்சேரி - கடலூர் மெயின் ரோட்டில் தவளக்குப்பம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. வங்கி அருகிலேயே ஏடிஎம் மையமும் அமைந்துள்ளது. நேற்று அதி காலை சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்குள்ள ஏடிஎம் இயந் திரத்தை கள்ளச் சாவி மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன் படுத்தி திறந்துள்ளனர். பின்னர், அதில் இருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள் ளையடித்து சென்று விட்டனர்.

இந்த ஏடிஎம் மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (57) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக அருகில் உள்ள சிறிய அறையில் உறங்கியுள்ளார்.

அதிகாலை 4.30 மணிக்கு கண் விழித்தபோது, ஏடிஎம் இயந் திரம் திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அருகில் உள்ள போலீஸ் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீ ஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி னர். மேலும், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை நடந்த ஏடிஎம் மையத்தை புதுச்சேரி சீனியர் எஸ்பி சந்திரன், கிராமப்புற எஸ்பி தெய்வசிகாமணி, வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

காவலாளி துரைசாமியிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘நான் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் கொள்ளை நடந்து விட்டது’ என்று கூறியுள்ளார். எனினும், துரைசாமி மற்றும் அருகில் உள்ள தனியார் மோட்டார் நிறுவன காவலாளிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏடிஎம் இயந்திரத்தின் ரகசிய எண் மூலமாக திறந்து கொள்ளையடித்துச் சென்றதால் வங்கிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். எனவே, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து எஸ்பி தெய்வ சிகாமணி கூறும்போது, “ஏடிஎம் மில் நேற்று முன்தினம் மாலை ரூ.17.5 லட்சம் பணம் நிரப்பப் பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.4 லட்சம் வரை பணம் இருந்த தாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ள னர். அதில், ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், வங்கிக்கு சம்மந்தப்பட்டவர்கள், ரகசிய எண்ணை தெரிந்தவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை. மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் சுமார் 7 நிமிடங்கள் வரை இருந்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x