Published : 27 Jan 2015 09:20 AM
Last Updated : 27 Jan 2015 09:20 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் இன்று கடைசி - ஜன.30-ல் இறுதி வேட்பாளர் பட்டியல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் ஜன.19-ம் தேதி தொடங்கியது.

இதுவரை இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்த், பாஜக சார்பில் சுப்பிரமணியம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், டிராபிக் ராமசாமி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 17 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைய உள்ளது.

வேட்புமனுக்களை திண் டுக்கல் சாலை சோழன் நகரில் உள்ள தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்திலும், திருவானைக்காவில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் அளிக்க வசதிகள் செய்யப்பட் டுள்ளன.

கடைசி நாளான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

மேலும், சுயேச்சை வேட்பா ளர்கள் சிலரும் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் பரிசீலனை ஜன.28-ம் தேதி நடைபெறுகிறது. ஜன.30-ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

அன்றைய தினம் போட்டி யிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு பிப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது.வாக்குப்பதிவுக்கு என தொகுதி முழுவதும் 322 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப் பட்டு, அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குகள் எண்ணிக்கை பிப்.16-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் காங் கிரஸ், பாமக, தமாகா ஆகியவை போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x