Published : 31 Jan 2015 12:24 PM
Last Updated : 31 Jan 2015 12:24 PM

ஒபாமா வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கப்பட்டது: அமெரிக்க தூதரகம்

டெல்லியில் மாசை கட்டுப்படுத்த முடியாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை அந்நாட்டு தூதரகம் விலைக்கு வாங்கி வந்தது.

குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தார். புதுடெல்லியில் நிலவும் மாசு அளவு குறித்து வழக்கமாக கணக்கெடுக்கும் அங்குள்ள அமெரிக்க தூதரகம், ஒபாமாவின் வருகைக்காக முன்னதாக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை ஸ்வீடன் நிறுவனமான ப்ளூ ஏரிடமிருந்து விலைக்கு வாங்கி பொறுத்தப்பட்டது.

இது குறித்து அமெரிக்க தூதரகம் சார்பில் கூறும்போது, "டெல்லியில் நிலவும் மாசு கட்டுப்படுத்த முடியாத அளவில் 222 ஆக அமெரிக்க தூதரக காற்று தர குறியீட்டில் பதிவானது. இந்த அளவு அபாயகரமானது. இதனால் இருதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள், சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நாங்கள் முன்னெச்சரிக்கை எடுத்தோம்" என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x