Published : 09 Sep 2014 11:14 AM
Last Updated : 09 Sep 2014 11:14 AM
டெல்லி ஆக்ரா இடையே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து மேலும் 8 வழித்தடங்களில் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்கி சோதனை செய்யவுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா மேலும் கூறியதாவது: டெல்லி ஆக்ரா இடையே 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமாக மேற்கொள் ளப்பட்டது. 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலின் சேவை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், டெல்லி கான்பூர், டெல்லி சண்டிகர், சென்னை ஹைதராபாத், நாக்பூர் செகந்திராபாத், மும்பை கோவா உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இந்த அதி வேக ரயிலின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக தண்டவாளத்தை பலப்படுத்துதல், சிக்னல் முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டு வருகிறோம்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. அதி வேக ரயில் சேவை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் ரயில்வே துறை யில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளோம். இந்த நிதியாண்டில் இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 6 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எரிபொருள் விலைக்கு ஏற்ப பயணிகள் ரயில் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ககோத்கர் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்து வருகி றோம். தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நவீன தொழில்நுட்பத்துடன் கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். விபத்துகளை தடுக்கும் வகையில் 279 ஆளில்லா லெவல் கிராசிங் பகுதியில் பாலங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.