Published : 13 Sep 2014 10:04 AM
Last Updated : 13 Sep 2014 10:04 AM
மேகாலயா கிராமவாசிகளை கேரோ தேசிய விடுதலைப் படை தீவிரவாதிகள் மிகக் கொடூரமாக அடித்து துன்புறுத்திய வீடியோ பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 4 ம் தேதி தீவிரவாதிகள் ஆயுதங்க ளுடன் நுழைந்தனர். கிராமவாசி களை வரிசையாக நிற்க வைத்த அவர்கள், ‘எங்களை போலீஸுல் காட்டிக் கொடுத்தது யார்?’ என்று கேட்டனர்.
பின்னர் சந்தேகத்துக்குரிய கிராமவாசிகளை அங்குள்ள மைதானத்துக்கு இழுத்துச் சென்ற தீவிரவாதிகள், அவர்களை தடியால் அடித்து நொறுக்கினர். கிராமவாசிகள் தப்பியோடினால் சுட்டு வீழ்த்துவதற்காக அந்த மைதானத்தை சுற்றி தீவிரவாதி கள் துப்பாக்கியுடன் நின்றனர்.
இதனால் தடியடியை தாங்கிக் கொண்ட அவர்கள் வலியால் அலறி துடித்தனர். பலர் மைதானத்தில் மயங்கி விழுந்த னர். அதன்பின்னரும் தீவிரவாதி கள் விடவில்லை. கும்பலாகச் சேர்ந்து தரையில் மயங்கி விழுந்தவர்களை ஆக்ரோஷ மாக அடித்தனர். இந்தச் சம்பவங் களை ஒரு தீவிரவாதி தனது செல்போனில் படம் பிடித்துள் ளார்.
அண்மையில் குறிப்பிட்ட கிராமத்தில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த செல்போன் சிக்கியது. அதில் இருந்த காட்சிகளைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராஜு கூறியபோது, நாங்கள் கிராமவாசிகளை உளவாளிகளாக பயன்படுத்து வது இல்லை. கேரோ தீவிரவாதி களின் கொடூர செயல்களுக்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. தீவிரவாதிகளை அழிக்க இப்போது கிராமம், கிராமமாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கேரோ தீவிரவாதிகள் யார்?
மேகாலயாவில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக கேரோ மக்கள் உள்ளனர். அங்கு கேரோ ஹில்ஸ் பகுதியில் அவர்களின் ஆதிக்கம் அதிகம். கடந்த 2009-ம் ஆண்டில் கேரோ மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி முன்னாள் போலீஸ் டி.எஸ்.பி. பாக்சரா ஆர். சங்மா, கேரோ தேசிய விடுதலைப் படையை உருவாக்கினார். 2011-ம் ஆண்டில் இதனை மத்திய அரசு தடை செய்தது. அதன்பின்னர் இந்த அமைப் பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கேரோ ஹில்ஸ் மலைப்பகுதியில் பதுங்கியிருந்து பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.