Published : 27 Sep 2014 10:44 AM
Last Updated : 27 Sep 2014 10:44 AM

புலிகள் தடை மீது தீர்ப்பாய விசாரணை: மத்திய உள்துறை சார்புச் செயலர் சாட்சியம்

விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு தடை தொடர்பான தீர்ப்பாய விசாரணை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை சார்பு செயலர் நரேந்திர குமார் சாட்சியம் அளித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது சரியா என விசாரணை நடத்த தீர்ப்பாயம் அமைக்கப்பட் டுள்ளது. டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.பி.மிட்டல் தீர்ப்பாய நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதன் விசாரணை சென்னை எம்ஆர்சி நகரில் நேற்று நடைபெற்றது. நீதிபதி மிட்டல் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் நரேந்திரகுமார் சாட்சியம் அளித்தார். அப்போது விடுதலை புலிகள் மீதான தடையை தொடர்வதற்கான முகாந்திரம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் லோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராயினர். இன்று நடைபெறும் விசாரணையில் தமிழ்நாடு கியூ பிரிவைச் சேர்ந்த 2 டிஎஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர், ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளனர்.

இந்த விசாரணையில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தீர்ப்பாய விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மனுதாக்கல் செய்திருந்தேன். அதை பெற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு தரப்பாக சேர்க்க அனுமதிக் காவிட்டாலும் இந்த விசாரணை யில் பங்கேற்கலாம்.

தன் தரப்பு கருத்துகளை எடுத்துக்கூறலாம் என்று எனக்கு அனுமதி அளித்ததன் பேரில் விசாரணையில் நானும் பங்கேற்றேன். உள்துறை செயலர் அளித்த சாட்சியங்களின் பேரில் நீதிபதி மூலமாக விளக்கங்கள் கேட்க அனுமதி அளிக்கப்பட்டது.

கைதான 3 பேர் விடுதலைப்புலிகளா?

விடுதலை புலிகள் மீது மத்திய அரசு பிறப்பித்த தடை ஆணையில் சுதந்திர தமிழ் ஈழ நாடு கேட்பதால் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தாக இருக்கிறது என்ற காரணத்தை கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. 2012-ல் 3 விடுதலைப் புலிகளை தமிழகத்தில் கைது செய்திருப்பதாக உள்துறை அமைச்சக சார்பு செயலர் நரேந்திரகுமார், விசாரணையின் போது தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 3 பேர் விடுதலைப் புலிகள்தான் என்பதற்கு என்ன ஆதாராம் வைத்தி ருக்கிறீர்கள்? என்று கேட்டேன். இதை உங்கள் இறுதி வாதத்தில் முன் வைக்கலாம் என்று நீதிபதி கூறிவிட்டார்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x