Published : 18 Aug 2014 11:21 AM
Last Updated : 18 Aug 2014 11:21 AM

மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விலகிய மன்மோகன் சிங்: மகள் தமன் சிங் எழுதிய நூலில் ருசிகர தகவல்

பள்ளி இறுதி வகுப்பை முடித்த பின்பு மருத்துவர் படிப்புக்கான புதுமுக வகுப்பில் சேர்ந்த மன்மோகன் சிங், அதில் விருப்பமின்றி 2 மாதத்தில் கல்லூரியிலிருந்து விலகினார் என்று மன்மோகனின் மகள் தமன் சிங் எழுதியுள்ள நூலில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கவுர் ஆகியோர் பற்றிய வாழ்க்கை வரலாறு நூலை, அவர்களின் மகள் தமன் சிங் எழுதியுள்ளார். ‘ஸ்டிரிக்ட்லி பர்சனல்: மன்மோகன் அண்ட் குர்சரண்’ என்ற நூலில், தனது தந்தையின் பள்ளி, கல்லூரி, அலுவலக அனுபவங்கள், குடும்ப உறுப்பினர்களுடன் அவர் பழகும் விதம், அவரின் நகைச்சுவை உணர்வு பற்றி பல்வேறு சுவையான தகவல்களை தமன் சிங் தெரிவித்துள்ளார்.

நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

“1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமிர்தசரஸில் உள்ள கல்சா கல்லூரியில் சேர்ந்த மன்மோகன் சிங், அவரின் தந்தையின் விருப்பப்படி மருத் துவப் படிப்பிற்கு முந்தைய புதுமுக படிப் பான எப்.எஸ்.சி.யில் சேர்ந்தார். ஆனால், அதில் அவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. மருத்துவராவதில் விருப்பமில்லாத மன்மோகன் சிங், 2 மாதங்களில் கல்லூரியி லிருந்து விலகினார்.

அவரின் தந்தையின் கடைக்கு பணிக்குச் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு சமஉரிமை வழங்கப்படவில்லை. தண்ணீர், டீ கொண்டு வரும் பணியாளராக செயல்பட நேர்ந்தது. அது பிடிக்காமல், மீண்டும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து கல்லூரிக்குச் சென்று பொருளாதாரப் பிரிவில் சேர்ந்தார்.

பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது போதிய பண வசதியின்றி கஷ்டப்பட்டார். உணவுக்கு அதிகம் செல வாகும் என்பதால், பல சமயங்களில் சாக் லேட்டுகளை சாப்பிட்டு சமாளித்துள்ளார். அவரது நண்பர்களுடன் சேர்ந்துவிட்டால், அரட்டைக் கச்சேரி நடத்தி அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடுவார். உறவினர்கள், நண்பர்களுக்கு பட்டப்பெயர்களை வைப் பதில் மன்மோகன் சிங் வல்லவர். இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாத அளவுக்கு ரகசியமாக வைத்திருக்கிறார்.

தனது ஓய்வு நேரத்தை புத்தகங்களை வாசிப்பதற்கு அவர் செலவிடுவார். இவ்வாறு தனது நூலில் தமன் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x