Published : 30 Aug 2014 10:34 am

Updated : 30 Aug 2014 10:34 am

 

Published : 30 Aug 2014 10:34 AM
Last Updated : 30 Aug 2014 10:34 AM

சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு: நாசா

சூரியனில் மிக வீரியமான பிழம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்தச் சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொரு 11 ஆண்டு களுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும்.

வெளிப்படும் சில நெருப்புப் பிழம்புகளின் அளவு பூமியின் அளவைப் போன்று 14 மடங்கு அதிகமாக இருக்கும். அதிலிருந்து கதிரியக்கமும் ஏற்படும்.

சூரிய நடுக்கம்

இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி' எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது.

இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறும்போது, "இந்தச் சூரியப் பிழம்பு கள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.

பாதிப்புகள் தொடரும்

நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும்வரை இந்த‌ப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள பிற உயிரினங்களுக்கோp எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தன் தரை, கடல் மற்றும் வான்வழி தொலைதொடர்பு சாதனங்க ளை எல்லாம் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய பிழம்புபூமிக்கு பாதிப்புவிண்வெளி ஆய்வு மையம்நாசாபுதிய கண்டுபிடிப்பு

You May Like

More From This Category

More From this Author