Published : 26 Feb 2014 01:55 PM
Last Updated : 26 Feb 2014 01:55 PM

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சி: ஸ்டாலின் தாக்கு

மக்களவைத் தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்னரே அதிமுக தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சார தேதிகளையும் அறிவித்துள்ளது, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கும் முயற்சி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், பெங்களூருவில் நடைபெற்று வரும் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்க்க ஜெயலலிதா முடிவு செய்துவிட்டார். இதன் காரணமாகவே அவசர அவசரமாக தேர்தல் பிரச்சார பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார், என்றார்.

விஜயகாந்துடன் கூட்டணி இல்லை:

தேர்தல் கூட்டணியை பொறுத்த வரையில், திமுகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன, இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி தேர்தலை கூட்டாக சந்திக்கும் என்றார்.

தேமுதிகவுக்கு கூட்டணி அமைக்க பலமுறை அழைப்பு விடுத்து வந்தது திமுக. ஆனால், ஸ்டாலினின் பேச்சு திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைய வாய்ப்பிலை என்பதை தெரிவிப்பதாக உள்ளது என கூறப்படுகிறது.

அமைதி, வளமை, வளர்ச்சியை ஏற்படுத்துவதே இலக்கு என தமிழக அரசு தெரிவித்து வருகிறது ஆனால் சென்னையில் ஐ.டி இன்ஜினீயர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறை துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என கூறியுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் "அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை, வளமையும் இல்லை" என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x