Published : 11 Mar 2015 10:02 AM
Last Updated : 11 Mar 2015 10:02 AM
பொதுத்துறை வங்கிகளின் தலைவர் களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று சந்திக் கிறார். இந்த சந்திப்பில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக் கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த ரெபோ வட்டி குறைப்பின் பலன்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்தும், ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் கடன் வழங்குவது குறித்து விவாதிக்கப்படலாம்.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்களை மேம்படுத்துவது மற்றும் வங்கி களுக்கான முதலீட்டைக் கொண்டு வருவது குறித்து இந்த கூட்டத் தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட ஒன்பது வங்கிகளுக்கு ரூ. 6,990 கோடி முதலீடு அளிப்பது குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.