Published : 12 Mar 2015 12:46 pm

Updated : 12 Mar 2015 12:46 pm

 

Published : 12 Mar 2015 12:46 PM
Last Updated : 12 Mar 2015 12:46 PM

கேரள சட்டப் பேரவை புதிய சபாநாயகராக என்.சக்தான் தேர்வு

கேரள சட்டப் பேரவை புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியினர் என்.சக்தான் தேர்வானார்.

கடந்த 8-ம் தேதியன்று, கேரள சட்டப் பேரவைத் தலைவர் ஜி.கார்த்திகேயன் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று சட்டப் பேரவையில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் என்.சக்தானும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆய்ஷா போட்டியும் முன் நிறுத்தப்பட்டனர். சுமார் 50 நிமிடங்கள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் என்.சக்தான் 74 வாக்குகள் பெற்றார்.

என்.சக்தான் வெற்றி பெற்றதாக கேரள சட்டப்பேரவை இடைக்காலத் தலைவர் அறிவித்தார்.

கேரள சட்டப்பேரவைசபாநாயகர்புதிய சபாநாயகர் தேர்வு

You May Like

More From This Category

More From this Author