Published : 20 Mar 2015 09:51 AM
Last Updated : 20 Mar 2015 09:51 AM

இவரைத் தெரியுமா?- சுரேஷ் கிருஷ்ணா

டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். இதற்கு முன்பு குழும நிறுவனமான சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

1955 சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளநிலை பட்டமும், விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் எம்ஏ பட்டமும் பெற்றவர். ஜெர்மனியில் உள்ள முனீச் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மாநில அரசின் பல்வேறு தொழில் ஆலோசனை குழுக்களில் இடம் பிடித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரதமருக்கான வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றுள்ளார். 26 நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

ஐஎஸ்ஓ 9000 சான்று வாங்கிய முதல் இந்திய நிறுவனம், ஜெனரல் மோட்டார் நிறுவனத்திடமிருந்து பெஸ்ட் சப்ளையர் விருது வாங்கிய ஒரே ஒரு இந்திய நிறுவனம் என டிவிஎஸ் நிறுவனத்தை கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர்.

பிசினஸ்மேன் 1995 விருது, 1997ல் கிம்ப்ரோ பிளாட்டினம் ஸ்டாண்டர்டு விருது, 2000-ம் ஆண்டு புரடக்டிவிட்டி ஆர்கனைசேஷன் வழங்கிய ஆசியாவின் தரமான லீடர்ஷிப் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x