Published : 12 Mar 2015 10:58 AM
Last Updated : 12 Mar 2015 10:58 AM

இவரைத் தெரியுமா?- தேவேந்திர ஷா

# பராக் பால் சார்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

# இந்தத் துறையில் பல வருட அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு பீமசங்கர், பார்கன் நிறுவனங்களில் இயக்குநராக இருந்தவர். கிராமப்புற மேம்பாடு தேசிய மையத்தில் செயலாளராகவும் இருந்தவர்.

# இந்தியாவின் மிகப்பெரிய பால் பண்ணையான பாக்கியலெட்சுமி பண்ணையின் நிறுவனர். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புனே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.

# ஜவுளித் துறையை பின்புலமாகக் கொண்ட குடும்பம். 1991 பால் உற்பத்தியில் தனியாரும் ஈடுபடலாம் என அறிவித்த பிறகு இந்த துறையில் இறங்கினார்.

# 1992 கூட்டுறவு வங்கி கடனுதவியுடன் மகாராஷ்டிராவில் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

# மகாராஷ்டிர அரசு இவருக்கு உத்யோக் புருஷ் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்.

# ஆசியாவின் மிகபெரிய சீஸ் தயாரிப்பாளர். இரண்டு பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது இவரது நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x