Last Updated : 06 Jan, 2015 10:40 AM

 

Published : 06 Jan 2015 10:40 AM
Last Updated : 06 Jan 2015 10:40 AM

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப் வழங்கும் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்

டெல்லியில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் வீடு களுக்கு 10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

தெருக்களில் மற்றும் வீடுகளில் எல்.இ.டி. விளக்குகளை பயன் படுத்தும் தேசிய திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த பிரதமர், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் எல்இடி பல்ப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசும்போது, “எல்.இ.டி. விளக்கு பிரகாசத்தை நோக்கி செல்லும் பாதை. மின்சாரம் உற்பத்தி செய்வதை விட அதை சேமிப்பது மிகவும் சிக்கனமானது. தேசிய அளவிலான புதிய திட்டம் மூலம் நாட்டின் இறக்குமதி செலவு குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றார்.

டெல்லியில் வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக எல்.இ.டி. பல்ப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.130 விலையுள்ள இந்த விளக்கு, முதலில் ரூ.10 பெற்றுக் கொண்டு தரப்படும். பின்னர் எஞ்சிய ரூ.120-ஐ மாதந்தோறும் ரூ.10 வீதம் 12 மாதங்களுக்கு அக்குடும்பத்தின் மின்சார கட்டணத் துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

சந்தை மதிப்பில் இந்த விளக்கின் விலை ரூ.350 முதல் ரூ.600 வரை இருக்கும். ஆனால் டெல்லி மாநில அரசு மொத்தமாக கொள்முதல் செய்வதால் ரூ.130-க்கு நுகர்வோருக்கு வழங்குகிறது.

மேலும் நாடு முழுவதும் 100 நகரங்களில் வீடுகளில் மற்றும் தெருக்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் திட்டத்தை மார்ச் 2016-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்.இ.டி. விளக்குகள் சாதாரண விளக்குகளை விட 50 மடங்கு அதிகம் உழைக்கக் கூடியது. இது அதிக வெளிச்சம் தருவதுடன் மின்சாரத்தை குறை வாக பயன்படுத்துவதால் நுகர் வோருக்கு மின்சார கட்டணத் தையும் குறைக்கிறது.

டெல்லி மக்கள் வீட்டு உபயோகத்துக்கான எல்.இ.டி. விளக்குகளை பெறுவதற்கு, இணைய தளம் மூலம் பதிவு செய்துகொள்ளும் வசதியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

பிரதமர் அலுவலகம் அமைந் துள்ள சவுத் பிளாக் பகுதியில் எல்.இ.டி. விளக்கு ஒன்றையும் நரேந்திர மோடி நேற்று பொருத் தினார். சவுத் பிளாக் பகுதியில் உள்ள விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவதன் மூலம் மின்சாரப் பயன்பாடு மாதந்தோறும் 7 ஆயிரம் யூனிட் குறையும் என்று கூறப்படுகிறது.

“எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்த மக்களை ஊக்கு விக்கும் பணியில் நாட்டின் பிர பலங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புத்தாண் டுக்கு காலண்டர்கள், டைரிகள் வழங்குவதற்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பரிசாக வழங்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு மாவட்ட அளவில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். 1 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களுக்கும் முன்னுரிமை தரவேண்டும்” என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x