Last Updated : 06 Jan, 2015 11:29 AM

 

Published : 06 Jan 2015 11:29 AM
Last Updated : 06 Jan 2015 11:29 AM

"பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது" - நொமுரா அறிக்கை

நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று நொமுரா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2015 நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும், 2016ல் இது 6.6 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்களின் அழுத்தம் காரணமாக, இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் டிசம்பர் மாதத்தில்தான் அதன் உச்ச வளர்ச்சியை கண்டது. ஆறு முக்கிய துறைகளில் ஆண்டு வளர்ச்சி 6.7 சதவீதமாகத்தான் உள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மீள்கட்டமைக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது ஜப்பனைச் சேர்ந்த ஒரு தரகு நிறுவனம்.

இந்த காலகட்டம் நுகர்வோர் விலை குறியீட்டுக்கான சாதகமான அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது. மேலும் உணவு பணவீக்க விகிதம் 4.4 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இது கடந்த மூன்று மாதங்களாக 4.4 சதவீத புள்ளியிலிருந்து 0.00 புள்ளிக்கு வந்துள்ளது என்று நம்புவதாகவும், மார்ச் மாதத்திற்கு பிறகு இது 5 சதவீதமாக வளரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் 2016 ஜனவரி மாதம் 6 சதவீதமாகவும், ஏப்ரல் முதல் ஜூன் ஜூலை மாதத்தில் இது 7.5 சதவீதமாகவும் வளரும் என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x