Published : 14 Jan 2015 01:25 PM
Last Updated : 14 Jan 2015 01:25 PM

விளையாட்டுச் செய்திச் சாரல்கள்...

# ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி ‘ஏ’ பிரிவில், ஆஸ்திரேலியா ஓமன் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

# பார்முலா ஒன் கார் கிராண்ட் பிரீ கார்பந்தயத்தில் 2015-க்கான பட்டியலில் கொரியாவில் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 20 சுற்றுக்கள் மட்டுமே போட்டி நடைபெறும்.

# ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘இந்நாளை என்றும் மறக்கமாட்டேன்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

# ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. முதன்முறையாக தந்தையாகியுள்ள ஹாரிஸ், மேற்கிந்தியத் தீவு செல்லும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

# ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவுக்காக பங்கேற்பதை உலகின் 4-ம் நிலை வீராங்கனை மரியா ஷரபோவா உறுதி செய்துள்ளார்.

# சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசுவதாகக் கூறி தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு சென்னையில் வரும் 24-ம் தேதி அதிகாரப்பூர்வ பந்துவீச்சு பரிசோதனை நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x