Published : 24 Jan 2015 09:37 am

Updated : 24 Jan 2015 09:38 am

 

Published : 24 Jan 2015 09:37 AM
Last Updated : 24 Jan 2015 09:38 AM

ஒரே பைக்கில் 6 பேர் பயணம்: பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

6-4

தூத்துக்குடி அருகே 6 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர், அண்ணாநகர் கால னியை சேர்ந்த சின்னதுரை மகன் சந்திரசேகர் (34). உப்பளத் தொழிலாளி. இவரது மகள்கள் முத்துப்பிரியா (12), அனுசியா (11), மகன் குமார் (9) ஆகியோர் குளத்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முறையே 6, 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும், தனது மூன்று குழந்தைகள் மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் மாதேஷ் (5), மாரிச்சாமி மகள் லதா (15) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் சந்திரசேகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஒரே மோட்டார் சைக் கிளில் 6 பேர் பயணித்ததுடன், மாணவ மாணவியரின் புத்த கப் பைகளையும் தொங்க விட்டிருந்தார்.

கிழக்கு கடற்கரை சாலை யில் அண்ணாநகர் காலனி அருகே சென்றபோது ஹேண்ட் பாரில் புத்தகப்பைகள் சிக்கிக் கொண்டதால், மோட்டார் சைக்கிளை திருப்ப முடியவில்லை. அப்போது எதிரே பூசனூரில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

சந்திரசேகர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மாணவ, மாணவியர் 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் முத்துப்பிரியா, குமார், மாதேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனுசியா, லதா ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மா.துரை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த குளத்தூர் போலீஸார், லாரி ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம், மானூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.

6 பேர் பயணம்பள்ளி குழந்தைகள்4 பேர் பலி

You May Like

More From This Category

More From this Author