Published : 07 Jan 2015 04:05 PM
Last Updated : 07 Jan 2015 04:05 PM

சிமி தீவிரவாதிகள் ஊடுருவல்: திருப்பதியில் உஷார் நிலை

சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிமி தீவிரவாதிகளான ஃபயாசுதீன், மகபூப், ஜாகீர் உசைன், அம்ஜல், அஸ்லாம் ஆகியோர் நெல்லூரில் ஊடுருவி இருக்கலாம் என தமிழகப் புலனாய்வுத் துறை போலீஸார் கருதுகின்றனர். இதுதொடர்பாக ஆந்திர போலீஸாருக்கு எச்ச ரிக்கை கொடுத்துள்ளனர். இவர் களின் புகைப்படங்களையும் ஆந்திர போலீஸாருக்கு அனுப்பி வைத்துள்ள னர். இஸ்ரோ மற்றும் முக்கிய கோயில்களை தீவிரவாதிகள் குறி வைத்திருக்கலாம் என போலீஸார் கருது கின்றனர்.

இதையடுத்து, தமிழக-ஆந்திர எல்லையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. நெல்லூர், சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இஸ்ரோ மற்றும் காளஹஸ்தி அருகில் உள்ள ஸ்ரீ சிட்டி தொழில்நகரம்ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலை யான் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், பத்மாவதி தாயார் கோயில், காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x