Published : 09 Oct 2014 10:25 AM
Last Updated : 09 Oct 2014 10:25 AM

இந்தியா கேட் பகுதியில் தினமும் 3 குழந்தைகள் மாயம்: பாதுகாப்பை அதிகரிக்க டெல்லி போலீஸுக்கு உத்தரவு

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நாள் ஒன்றுக்கு மூன்று குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் புல்வெளியில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் மக்கள் கூடுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு வருகின்றனர். விடுமுறை தினங்களில் இப்பகுதிக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இப்பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஜான்வி என்ற மூன்று வயது சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எட்டு நாட்களுக்குப் பின் அச்சிறுமி ஜனக்புரி பகுதியில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். இச் சம்பவத் தையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு மூன்று குழந்தைகள் காணாமல் போவது தெரியவந்துள்ளது.

எனவே, இப்பகுதியில் பாது காப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி போலீஸாரை கேட்டுக் கொண் டுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மூன்று வயது சிறுமி மாயமாகி பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்தை யடுத்து, இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் பகுதியை குற்றம் நிகழாத பாதுகாப்பு மிக்க பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இப்பகுதியில் தற்போது 40 கண் காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பதிவாகும் வீடியோவின் தரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் உள்ளது.

இவற்றை மாற்றியமைத்து தரமான 300 கேமராக்கள் நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறு பொருட்கள் விற்கும் வணிகர்களுக்கு அடையாள அட்டை தரப்பட உள்ளது. அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே இப்பகுதியில் பொருட்கள் விற்பனை செய்ய முடியும். அவர்களை நெருக்கமாக கண் காணிக்க போலீஸ் முடிவு செய்துள் ளது. சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டம் இருந்தால், அவர்களைப் பற்றி போலீஸாருக்கு தகவல் தருபவர்களாகவும் வணி கர்கள் இருப்பார்கள். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா கேட் பகுதி மிகவும் பாது காப்பான பகுதியாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x