Published : 08 Oct 2014 11:20 AM
Last Updated : 08 Oct 2014 11:20 AM

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்களும், கோவை – சென்னை இடையே பிரீமியம் சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி–சென்னை (கார்டு லைன்): திருநெல்வேலி–சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06714, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக – கார்டு லைன்) திருநெல்வேலியில் இருந்து வரும் 16-ம் தேதி மற்றும் 30-ம் தேதி இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06713) சென்னையில் இருந்து வரும் 17-ம் தேதி மற்றும் 31-ம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

மெயின் லைன்: திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06716, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக – மெயின் லைன்) திருநெல்வேலியில் இருந்து வரும் 12-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06715) சென்னையில் இருந்து வரும் 13-ம் தேதி மற்றும் நவம்பர் 3-ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06015, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) சென்னையில் இருந்து வரும் 18-ம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06016, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக) திருநெல்வேயில் இருந்து 19-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் – கோவை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06605) சென்னையில் இருந்து வரும் 27-ம் தேதி காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும். மேற்கண்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 9) தொடங்கும்.

பிரீமியம் ரயில்

கோவை – சென்னை சென்ட்ரல் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00606) கோவையில் இருந்து வரும் 26-ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி தொடங்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் பெட்டிகள்

சென்னை சென்ட்ரல் – மைசூர் – சென்னை சென்ட்ரல் (எண்கள்: 12007/12008) சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தற்காலிகமாக 4 ஏசி சேர் கார் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் ஏசி சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x