Published : 06 Oct 2014 12:23 PM
Last Updated : 06 Oct 2014 12:23 PM

ஷீரடி சாய்பாபா கோயிலில் 3 நாட்களில் ரூ. 4 கோடி காணிக்கை

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலில் 3 நாட்களில் பணம் மற்றும் நகைகளாக பக்தர்கள் ரூ.4.10 கோடி காணிக்கை செலுத்தியுள்ளதாக கோயில் அதிகாரிகள் நேற்று கூறினர்.

தசரா பண்டிகை நாளன்று சாய்பாபாவின் 96-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சுமார் 1.70 லட்சம் பக்தர்கள் இங்கு தரிசனம் செய்தனர். இவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணமாக ரூ. 4 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி ராஜேந்திர ஜாதவ் கூறும்போது, “ஷீரடியில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தின்போது பக்தர்களிடமிருந்து காணிக்கை பெட்டிகள் பெறப்பட்டன. கோயிலில் உள்ள கவுன்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். காசோலைகள், வரைவோலைகளும் பெறப்பட்டன. மதிய உணவு திட்டத்துக்கு ரொக்கமாகவும் பக்தர்கள் காணிக்கை வழங்கினர்” என்றார்.

இந்நிலையில் காணிக்கை பெட்டிகளில் 9 ஆயிரம் வெளிநாட்டு பணத் தாள்களும் இருந்ததாக கோயில் கணக்கு அதிகாரி திலீப் ஜிர்பி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x