Published : 27 Sep 2014 10:34 AM
Last Updated : 27 Sep 2014 10:34 AM
‘‘சீனா மற்றும் ஜப்பான் உதவியுடன் அதிவேக ரயில் சேவைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டத்துக்கு விஐடி மாணவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்’ என ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழ கத்தில் ‘‘கிராவிடாஸ்-14’’ என்ற அறிவுசார் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘இந்தியாவில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடும் பல்கலைக்கழகமாக விஐடி விளங்குகிறது. பிரான்சில் நடந்த அறிவியல் மாநாட்டில், உலகம் முழுவதும் 18 அணிகளை தேர்வு செய்தனர். இதில், ஆசியாவைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் குழுவினர் விஐடி பல் கலைக்கழக மாணவர்கள்தான்’’ என்றார்.
விழாவை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘ தேசிய திறன் வளர்ப்புக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சிறு குறு தொழில்முனைவோரை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இ-டிக்கெட்டிங் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பயணத்தின்போது இருப்பிடத் தைக் கண்டறியும் நவீன தொழில் நுட்பத்துக்கான அமெரிக்க காப்புரி மையை விஐடி மாணவிகள் லாவண்யா, சுதா கரிமெல்லா ஆகியோர் பெற்றுள்ளனர். கம்பி யில்லா இந்த தொழில்நுட்ப வசதியை ரயில்வேத் துறையில் பயன்படுத்திக்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.
ரயில் நிலையங்களை அடை யாளம் காணுவது, ரயில் நிலையங் கள் குறித்த தகவல்களை செல் போன் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது, பார்சல் சேவை கணினிமயம், வெகு தொலைவில் பணியாற்றும் ரயில்வே ஊழியர் களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் திட்டம் உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் உதவியுடன் அதி வேக ரயில் சேவை திட்டம் தொடங்க இருக்கிறோம் ’’ என்றார்.
விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் வி.ராஜூ, இணை துணைவேந்தர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.