Published : 25 Sep 2014 08:26 AM
Last Updated : 25 Sep 2014 08:26 AM

சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் நிருபர்கள்: பிரச்சினையைத் தீர்க்க தொடரும் பேச்சுவார்த்தை

திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு குறிப் பிட்ட பத்திரிகையாளர்களை மட்டுமே அழைப்பது என்றும் இணையதள பத்திரிகை களை புறக்கணிப்பது என்றும் திரைத்துறையினர் முடிவெடுத்த தாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து திரைப்பட நிகழ்ச்சிகளை சினிமா பத்திரிகையாளர்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் நிருபர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் இனி குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் நிருபர்களை மட்டுமே அழைப்பது என்று திரைப்பட கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில் இதைக் கேள்விப்பட்ட சினிமா பத்திரி கையாளர்கள், இதைக் கண்டிக்கும் வகையில் சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளை சினிமா பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

இது குறித்து தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பில் ஒருவரும், தயாரிப் பாளர் சங்கத்தின் செயலாளருமான டி.சிவா கூறியதாவது:

தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு படத்தை விளம்பரப்படுத்த ரூ.2 கோடி தேவைப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் எல்லாம் ‘ பிரஸ் ஷோ’ என்கிற நடைமுறையே இல்லை. பெயரே வெளியில் தெரியாத பத்திரிகை மற்றும் இணையதள மீடியாக்களால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை. எங்களின் பொருள் எங்கு போய் சேர்கிறது என்கிற விஷயம் முக்கியம்.

மற்ற விஷயங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் என்ன விவாதிக்கிறோம், எதை ஆலோசித்து வருகிறோம் என்று விசாரிக்காமல் சிலர் வன்முறையான விஷயங்களை பரப்பியும், எழுதியும், பேசியும் வருகிறார்கள். திரைத்துறை தயாரிப்பாளர்களின் செலவுகளை எந்தெந்த வகையில் குறைக் கலாம் என்கிற முயற்சியில் ஆலோ சித்து வருவதை சிலர் தவறாக எடுத்துக்கொண்டு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு படத்தை பத்திரிகைகளும், ஊடகங்களும் தான் கொண்டு போய் சேர்க்கிறது. அதெல்லாம் புரியாமல் இல்லை. அதை தரமான ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் பத்திரிகைகள் மட்டுமே பரப்பினால் போதும். அதனால்தான் தரமற்ற மீடியாக் களை அனுமதிக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம் இல்லை’’

இவ்வாறு டி.சிவா கூறினார்.

திரைப்பட பத்திரிகையாளர் கூட்டமைப்பு சம்மேளன ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சங்கர் இதுபற்றி கூறியதாவது:

திரைத்துறையினருக்கு அவர்களின் தொழில் முக்கி யம். வியாபார ரீதியாக அவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் தடுக்கவில்லை. பத்திரிகை யாளர்களை பட்டியல் போட்டு வகுப் பதற்கும், அவர்களுக்கு கட்டுப் பாடு விதிப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். குறிப்பிட்ட பத்திரிகைகள் மற்றும் சேனல்கள் என்று வகைப்படுத்திக்கொண்டு மற்ற ஆன்லைன் மீடியாக்கள் வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்ததால்தான் இந்த நடவடிக்கையை எடுத்தோம். ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தடுக்கும் உரிமை சட்டப்படி யாருக்கும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பிரச்சினையைத் தீர்க்க இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x