Published : 27 Aug 2014 09:36 AM
Last Updated : 27 Aug 2014 09:36 AM

15 நாளில் குரூப்-2 தேர்வு முடிவு: தி இந்து செய்தி எதிரொலி

குரூப்-2 தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.

இப்பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு டிசம் பரில் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வெழுதிய பட்டதாரிகள் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இதுபற்றி கடந்த 21-ம் ‘தி இந்து’வில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பி ரமணியன், “கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலைத் தேர்வின் முடிவு 15 முதல் 20 நாட்களில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x