Published : 09 Jun 2014 04:42 PM
Last Updated : 09 Jun 2014 07:40 PM
பெண்களுக்கு எதிரான வன்முறை அறவே அகற்றப்படவேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்தியுள்ளார்.
"சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை அறவே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து கொள்கைகளை வடிவமைத்து அதனை அமல் படுத்த குற்ற நீதி அமைப்பு வலுப்படுத்தப்படவேண்டும்.
பெண் குழந்தைகளைப் பாதுகாக்க இந்த அரசு மிகப்பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அறிமுகம் செய்யும். இவர்களுக்கு கல்வி அளிக்கவும் இந்த அரசு ஏற்பாடுகள் செய்யும்" என்றார் பிரணாப் முகர்ஜி