Published : 26 Nov 2014 10:34 am

Updated : 26 Nov 2014 10:34 am

 

Published : 26 Nov 2014 10:34 AM
Last Updated : 26 Nov 2014 10:34 AM

டேவிஸ் கோப்பையை சகாக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - ஃபெடரெர்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் அடங்கிய ஸ்விட்சர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் பிரான்ஸை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் ஆனது. அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ரோஜர் ஃபெடரர், “இந்த வெற்றியை அணியில் இடம்பெற்றிருந்த எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றி எனக்கானது அல்ல. ஏனெனில் நான் போதுமான அளவுக்கு வென்றுவிட்டேன்.

நாட்டுக்காக பதக்கம் வெல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஜோ வில்பிரைட் சோங்காவை வீழ்த்தி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். அவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம் மிக விறுவிறுப்பானது” என ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வீடனிடம் தோற்ற இந்தியா

‘தி இந்துவில்’ நேற்று வெளியாகியிருந்த டேவிஸ் கோப்பை சிறப்பு செய்தியில் 1987 டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஸ்விட்சர்லாந்திடம் தோற்றது என இடம்பெற்று இருந்தது. இந்தியா, ஸ்வீடனிடம் தோற்றது என்பதே சரியானது.

டேவிஸ் கோப்பைடென்னிஸ் போட்டிரோஜர் ஃபெடரர்ஸ்விட்சர்லாந்து அணி

You May Like

More From This Category

More From this Author