Published : 17 Sep 2014 11:57 AM
Last Updated : 17 Sep 2014 11:57 AM

பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்: "உங்களுடைய பிறந்த நாள் இன்னும் எண்ணற்ற முறை சிறப்பாக வருவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டை உயர்ந்த சிகரங்களுக்கு இட்டுச்செல்லும் வகையில் இந்திய நாட்டு மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய விடியலை உருவாக்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இயற்கை தாய் தனது அனைத்து ஆசிகளையும் வழங்க விழைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x