Published : 20 Aug 2014 04:04 PM
Last Updated : 20 Aug 2014 04:04 PM

விஷம் தடவிய கடிதம் அனுப்ப முஜாஹிதீன் தீவிரவாதிகள் முயற்சி: டெல்லி போலீஸ் தகவல்

‘இந்தியன் முஜாஹிதீன் தீவிர வாதிகள் தாங்கள் கொலை செய்ய திட்டமிடும் தலைவர்களுக்கு ‘விஷம் தடவிய கடிதம்’ அனுப்ப முயற்சி செய்துள்ளனர்’ என்று டெல்லி போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள மீர் விஹார் அருகே நாங்லாய் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி போலீஸார் நடத்திய சோதனையில், இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப் பின் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற் றப்பட்டது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தெஹ்சின் அக்தர், ஜியா உர் ரஹ்மான், முகமது மெரூஃப், முகமது வகார் அசார், முகமது சாகிப் அன்சாரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டெல்லி கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை ஒன்றை டெல்லி போலீஸார் தாக்கல் செய்துள்ள னர். அதில், தெஹ்சின் அக்தர், முகமது வகார் அசார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய தலைவர்களைக் கொல்ல ‘விஷம் தடவிய கடிதம்’ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

மெக்னீஷியம் சல்பேட், அசிட்டோன், ஆமணக்கு விதை ஆகியவற்றைப் பயன்படுத்தி விஷம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த ரசாயனப் பொருட்கள் வகார் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் ஆகிய இடங் களில் குண்டு வைக்க அந்த இடங் களை தீவிரவாதிகள் நேரில் சென்று பார்வையிட்ட தகவலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் அதன் தலைவர் யாசின் பத்கலை ‘பையா’ என்றும், வெடிப்பொருட்களை ‘சிவி’ என்றும், அல்-கொய்தா அமைப்பை ‘படே’ என்றும் சங்கேத மொழிகளைப் பயன்படுத்தி அழைத்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை கூடுதல் குற்ற வியல் நீதிபதி ரீதேஷ் சிங் முன்பு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x