Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

திருமடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: இராம கோபாலன் கோரிக்கை

தமிழகத்திலுள்ள திருமடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பனந்தாள் காசி மடத்துக்குள் 23 வயது மதிக்கத் தக்க சையது இப்ராகிம் என்பவர் நுழைந்துள்ளார். மேலும் அத்திருமடத்துக்குள் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய அவரை மடத்தை சார்ந்த வர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட சையது இப்ராகிமிடம் திரு மடத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்ததாகவும் தெரிகிறது. மேலும் அந்த நபர் மீது சிலை கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இந்து திருமடங்கள் அந்நிய ஊடுருவலுக்கும், தாக்குதலுக் கும் இலக்காகியிருக்கிறதோ என்ற அச்சமான சூழல் உருவாகி யுள்ளது. எனவே தமிழக அரசும் காவல்துறையும் விழிப்புணர்வுடன் இருந்து இந்து ஆலயங்கள், திருமடங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தாபனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x