Published : 12 Feb 2014 08:13 PM
Last Updated : 12 Feb 2014 08:13 PM

செய்யாறு : பாதையும் இல்லை... இறுதிப் பயணமும் இல்லை: நித்தம் தொடரும் துயரம் க்ஷ்

‘‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா…ஆறடி நிலமே சொந்தமடா…’’ -போகிற போக்கைப் பார்த்தால் இந்த வரிகள் பொய்யாகிவிடும் போலிருக்கிறது. ஆம்! உயிரிழந்த உறவுகளை அடக்கம் செய்வதற்கு இடமின்றி பரிதவிக்கும் கொடுமை நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அப்படியே இடம் இருந்தாலும் பிணத்தைக் கொண்டு செல்ல பாதை இல்லை. இப்படிப் பட்ட சூழ்நிலையில்தான், திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு கொட நகர் ஆதிதிராவிட மக்கள் இருந்தும், இறந்தும் சமூக அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிதந்த சடலங்கள்

செய்யாறு நகரில் கொட நகர், திருவள்ளுவர் நகர், மேல் சமாதியான் குளத்தெரு, கீழ்சமாதி யான் குளத்தெரு குடியிருப்பு பகுதிகளில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 950 குடும்பங் களைச் சேர்ந்த சுமார் 3,600 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அங்கீகரிப்பட்ட மயான இடம் கிடையாது. செய்யாற்றங்கரை ஓரத்தில் 4 தலைமுறைகளாக அடக்கம் செய்து வந்தனர். மழைக் காலங்களில் அடக்கம் செய்யப் பட்ட சடலங்கள், வெளியே வந்து தண்ணீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள தனி நபர் இடத்தில் சடலங்களைப் புதைத்தனர். இதற்கு, நிலத்தின் உரிமையாளரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக் கால், ஆற்றங்கரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு, தனியார் இடத்தை ஆதிதிராவிடர்கள் முழுமையாக பயன்படுத்தினர். பிணத்தைக் கொண்டு செல்வதற்காக, அரசுக்குச் சொந்தமான இடத்தை பாதையாகப் பயன்படுத்தினர். அதற்கு, வருவாய்த் துறையும் அனுமதித்தது.

இந்நிலையில், தனி நபரின் இடமும் கைமாறியது. புதிதாக வாங்கிய நபர், செங்கல் சூளைக்கு மண் எடுத்துள்ளார்.

பாதைக்கு ஒதுக்கிய இடத்திலும் மண் எடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆதிதிராவிட மக்களின் குற்றச் சாட்டு. இளம்பெண் சடலத்தை புதைக்க இடம் இல்லாமல் கடந்த மாதம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருவாய்த் துறை மெத்தனம்

இது குறித்து பாபு உள்ளிட்டவர்கள் கூறுகையில், ‘‘தனி நபர் இடத்தில் எங்கள் உறவினர்களின் சடலங்களை, முப்பாட்டன் காலத்தில் இருந்து புதைத்து வருகிறோம். மயானத் திற்காக இடத்தை வழங்கு வதாக நிலத்தின் உரிமையாள ரும் கூறினார். பட்டா மாற்றுவதற் கான முயற்சி மேற்கொண் டோம்.

வருவாய்த்துறை அதற்கு ஒத்துழைக்க வில்லை. இதற் கிடையில், அந்த இடம் கைமாறி யது. அந்த நபரும் செங்கல் சூளைக்கு பள்ளம் தோண்டி வருகிறார். எங்களுக்கு ஒதுக்கப் பட்ட பாதையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

இதனால், புதைப்பதற்கு இடம் இல்லை. சடலத்தின் மீது மற்றொரு சடலத்தை புதைக்க வேண்டிய அவலம் உள்ளது. அதே இடத்தில் குறைந்தபட்சம் 50 சென்ட் இடத்தை வழங்க, வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு, வட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என அனைவரிடமும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இருப்பினும் பலனில்லை. நாங்கள் இறந்தால் புதைப்பதற்கு இடத்தை வழங்க ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

செய்யாறு வட்டாட்சியர் சேகர் கூறுகையில், ‘‘கொட நகர் பகுதி ஆதிதிராவிடர்களுக்கு, சடலங்களை அடக்கம் செய்வதற் கான இடம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டா இடத்தை மாற்றம் செய்து தர மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். விரைவில் இடம் வழங்கப்படும். மேலும், செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப் பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுப்பணி துறைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்’’ என்றார். சுடுகாடு இல்லையே என்று நினைத்து இருப்பவர்கள் அழலாம். இறக்கப்போகிற வர்கள் அழலாமா? என்ன கொடுமை இது?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கொட நகர் பகுதி ஆதிதிராவிட மக்கள், பட்டா இடத்தில் பயன்படுத்தி வந்த மயானப் பகுதியில் செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x