மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் - 2021


அன்பிற்கினிய இளைஞர்களே... வணக்கம்.

உள்ளங்கையில் உலகம் என்று எப்போதோ சொல்லிவைத்தது, இப்போது சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. சட்டை பாக்கெட்டில் பேனாவை வைத்திருந்தவர்களெல்லாம் கதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதினார்களோ இல்லையோ... செல்போன் வைத்திருப்பவர்கள் பலரும் வீடியோ எடுக்காமல் இருப்பதில்லை. நீங்கள் எடுக்கின்ற வீடியோவில் இருந்து சற்றே மாறுபட்டு, பயனுள்ள வீடியோக்களாக, வீடியோ செய்தியாக, உங்களை மடை மாற்றி, சற்றே நல்ல திசைக்குத் திருப்பும் பணியில் இறங்கியிருக்கிறது இந்து தமிழ் திசை - இணையதளம்.

தமிழ் இதழியலில் தனித்த அடையாளத்துடன் திகழும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளம், ஊடகத்துறையில் கால்பதிக்கத் துடிக்கிற இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை உலகுக்கே அடையாளம் காட்டும் பணியில் இப்போது இறங்கியுள்ளது. துடிப்புமிக்க, சேவை குணம் கொண்ட, உள்ளூர் செய்திகளை உலகுக்கு எடுத்துரைக்க ஆவல் கொண்டிருக்கிற இளைஞர்களாகிய உங்களைத்தான் தேடுகிறது.

உங்கள் மூலமாகவே, உங்கள் திறமையைக் கொண்டே, அந்தத் திறமையையும் செல்போனையும் மூலதனமாகக் கொண்டே உங்களைப் புதியதொரு களத்தில் பயணிக்கச் செய்ய முடிவு செய்துள்ளோம். அதுவே... 'இந்து தமிழ் திசை மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்'.

வருங்காலத்தில் சிறந்ததொரு ஊடகவியலாளராக உங்களை வெளிப்படுத்தித் தருவதே எங்களின் முதல், முழு நோக்கம். உங்களுக்கான சமூகக் கடமையைச் செய்யும் அதே வேளையில், உங்கள் எதிர்காலத்துக்கான வேலைவாய்ப்பை அமைக்கவுமான 'வாடிவாசல்' இது. காளையெனச் சீறிப்புறப்பட்டால், உலகின் வெளிச்சம் உங்கள் மீது விழும்; உயர்ந்து ஜெயிப்பீர்கள்.ஜெயித்து உயருவீர்கள்.


விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.