வான்ட்டடா வாய்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேங்கிறாங்க!- சங்கடத்தில் சமக தலைவர்

வான்ட்டடா வாய்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேங்கிறாங்க!- சங்கடத்தில் சமக தலைவர்

சானா
readers@kamadenu.in

தமிழக அரசியல் களம் டெல்லி, பெங்களூரு என்று தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதால் எங்கு சென்று யாரைப் பேட்டி எடுப்பது என்று ஏகக் குழப்பத்தில் இருந்தான் பாச்சா. அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற நிகழ்ச்சியில், ஜெனிஃபர் லோபஸ் பாடலைக் கேட்டு ஜென்ம சாபல்யம் அடைந்திருந்த பைக், பதற்றத்தில் இருந்த பாச்சாவைப் பார்த்ததும் ஜெர்க்கானது!

“ஏய்யா, தமிழ்நாட்டுல தலைவர்களுக்கா பஞ்சம்? டெய்லி ஒரு தானைத் தலைவரை உருவாக்கவே டெல்லில இருந்து ஒரு டீம் உழைச்சிட்டு இருக்கு. நீ என்னடான்னா...” என்று இழுத்த பைக், “சூப்பர் ஸ்டாருக்கே டஃப் தர்ற சுப்ரீம் ஸ்டார் இருக்காரே… மறந்துட்டியா?” என்றது.
“அட ஆமாம்பா! தனிச் சின்னத்துல போட்டியிடுறதா சொல்லித் தமிழ்நாட்டையே அதிர வச்சிருக்கார்” என்று ஆயத்தமானான் 
பாச்சா.

கட்சி அலுவலகத்தில் காற்று(கூட!) வராததால், தனக்குத்தானே விசிறிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்த சரத்குமார் முன் தோன்றி சலாம் வைத்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in