வீட்டில் வசிக்கும் கடவுள் - ஹரணி

வீட்டில் வசிக்கும் கடவுள் - ஹரணி

நள்ளிரவா, அதிகாலையா தெரியவில்லை. தூக்கத்தைச் சட்டென்று அறுத்துப்போட்டது எதுவென்று புரியாமல் படுக்கையிலேயே புரண்டுகொண்டிருந்தார் சங்கரன். அறையில் இன்னமும் அடர்ந்த இருள் சூழ்ந்திருந்தது. நேற்றிரவு முன்னதாகவே உறங்கச்சென்றும் இப்படித் தூக்கம் கலைந்தது அவரைக் கவலைகொள்ளச் செய்தது. எழுந்து அமர்ந்தவர், விளக்கைப் போட்டு கண்ணாடியை எடுத்து அணிந்தார். சுவரில் கண்ணைப் பதித்து, கடிகாரத்தில் மணி பார்த்தார். 4 மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.

மெல்ல நடந்து கழிப்பறைக்குப் போய்த் திரும்பி வந்தபோதுதான் வயிற்றில் அந்த வலியை உணர்ந்தார். வயிற்றை இழுத்துச் சுருட்டி சுள்ளென சுண்டிவிட்டதுபோல் இருந்தது. தாள முடியாத வலி. இரவில் உண்ட உணவை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். ‘இடியாப்பமும் தேங்காய்ப் பாலும்தானே சாப்பிட்டோம். அது ஒண்ணும் பண்ணாதே… பின்னே, எதனால இந்த வலி வந்துச்சு?’ என்று யோசித்துக்கொண்டே படுக்கையில் அமர்ந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன மனைவி லட்சுமி நினைவுக்குள் வந்து சிரித்தாள்.

“என்னங்க வயிறு வலிக்குதா? இதுக்கு மருந்து என்னன்னு நான் சொல்லிருக்கேனே… அதைச் செய்ங்க. சரியாகிடும்” என்று அவள் சொல்வதுபோலவே இருந்தது. அதே குரல், அதே வாஞ்சை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in