செயற்கரிய செய்யும் செங்குட்டுவனார்!- இப்படியும் ஒரு ஆசிரியர்

செயற்கரிய செய்யும் செங்குட்டுவனார்!- இப்படியும் ஒரு ஆசிரியர்

கரு.முத்து

அந்த வீடு முழுக்கவே பரிசுகள், பாராட்டுப்பத்திரங்கள், விருதுகள், ஷீல்டுகள் நிரம்பி வழிகின்றன. ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களும் சேர்ந்து வாங்கியிருந்தால்கூட இவ்வளவையும் வாங்கியிருக்க முடியுமாவெனத் தெரியவில்லை. அத்தனையையும் 52 வயதான இலா.செங்குட்டுவன் வாத்தியார் ஒருவரே வாங்கியிருக்கிறார்.

“ஆசிரியர் அறப்பணி... அதற்கே உன்னை அர்ப்பணி” என்பதற்கேற்ப மாணவர்களுக்காக செங்குட்டுவன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதற்கான அங்கீகாரம்தான் இத்தனை பரிசுகளும் பாராட்டுகளும்! ஜெயம்கொண்டம் அருகே புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரியும் செங்குட்டுவன், இதற்கு முன்பு பணிபுரிந்த தேவமங்களம் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக சாதித்தது ஏராளம்.

அங்கு தமிழகத்திலேயே முதல்முறையாக நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்துக்கு உரமூட்டினார். அதன் மூலம் இவரது மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள், 5 மாவட்டங்களில் 45 முறை பரிசுகளை அள்ளிவந்தன. மாணவர்களைக் குடியரசுத் தலைவர் வரைக்கும் கைகுலுக்க வைத்தது செங்குட்டுவனின் தன்னலமற்ற உழைப்புக்குக் கிடைத்த இன்னொரு அங்கீகாரம். அது மட்டுமல்ல... இவர் உருவாக்கிய அறிவியல் மாணவர்கள் இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகளையும் சந்தித்து உரையாடி அவர்கள் கையால் பரிசும் பெற்று வந்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in