டிக் டாக்கிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்... டிரெண்டிங் பிசினஸ்!

டிக் டாக்கிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்... டிரெண்டிங் பிசினஸ்!

கே.கே.மகேஷ்

அண்மையில் சிவகாசி சென்றிருந்தபோது, ஸ்ரீனிவாசா மெஸ் பேருந்து நிறுத்தம் அருகே ‘ டிக் டாக் சலூன்’ என்ற பெயரில் முடி திருத்தும் நிலையம் ஒன்றைக் கண்டேன். கடைப்பெயரே ஈர்த்தது. கடைக்கார தம்பிக்கு 23 வயதுதான் இருக்கும். முடி திருத்திக்கொள்ள வந்திருந்த இளைஞர்கள் அதைவிடவும் வயது குறைந்தவர்கள்!

கடைக்கு அருகில் இருந்த ஒருவர், "முன்னாடி எல்லாம் சலூன்ல சுத்தி சுத்தி கவர்ச்சிப்படங்களை ஒட்டி வெச்சிருப்பாங்க. நாம வெச்ச கண் வாங்காம, கழுத்தைத் திருப்பாம அதையே பார்த்துக்கிட்டு இருப்போம். அதே மாதிரி இந்தத் தம்பி ஸ்மார்ட் டீவியில வரிசையா டிக் டாக் வீடியோக்களைப் போட்டுத் தாக்குறாரு” என்று சொன்னார்.

ஆர்வத்தோடு கடைக்குப் போனேன். "சேவிங்கா?" என்றார் தம்பி. "இல்லை... வீடியோ" என்றேன். சிரித்தவர் மறுகணமே முகத்தைச் சோகமாக்கிக்கொண்டு, "இடிதாக்கி டிவியே எரிஞ்சு போச்சு சார்" என்றார். "அய்யய்யோ... சரி, எப்படி இந்த ஐடியா உங்களுக்கு வந்துச்சி சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க" என்றேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in